மானிடர் வாழ்க்கை இருவகையாகும்

சொந்தக் கவிதை -17

மானிடர் வாழ்க்கை இருவகையாகும் அதில்
மனிதராய்வாழ்வ தொன்று மிருகமாய்வாழ்வது மற்றொன்று
குணத்தால் வாழ்வது மனிதவாழ்க்கை
பணத்தால் வாழ்வது மிருகவாழ்க்கை

வளர்ந்தும் பிரியாதிருப்பது மனிதவாழ்க்கை
வளர்ந்ததும் பிரித்துவிடுவது மிருகவாழ்க்கை
அணைத்தே வாழ்வது மனிதவாழ்க்கை
அடித்தே கொல்வது மிருகவாழ்க்கை

கூடிவாழ்வது கோடிநன்மை மனிதவாழ்க்கை
கூடிவாழ்வது சிலநாட்கள் மிருகவாழ்க்கை
கூடியது வாழ்வதற்கே மனிதவாழ்க்கை
கூடியது பிரிவதற்க்கே மிருகவாழ்க்கை

இணைந்ததும் பெருகுவது மனிதவாழ்க்கை
பெருகியதும் இணைவது மிருகவாழ்க்கை
பிரிந்தவர் இணைவது மனிதவாழ்க்கை
பிரிந்தபின் இடமேயில்லை மிருகவாழ்க்கை

அன்னையும்பிதாவும் முன்னெறிதெய்வம் மனிதவாழ்க்கை
அன்னையும்பிதாவும் சிலநாட்கள்மட்டும் மிருகவாழ்க்கை
பெற்றவர்களை மரணம்வரைகாப்பது மனிதவாழ்க்கை
பெற்றவர்களை மறந்தேபோவது மிருகவாழ்க்கை

சிரித்து வாழ்வது மனிதவாழ்க்கை
சிரிப்பதற்கே இடமில்லை மிருகவாழ்க்கை
வாழ்க்கைத்தத்துவம் அறிந்தது மனிதவாழ்க்கை
தத்துவமே புரியாதுவாழ்வது மிருகவாழ்க்கை

உற்றார்உறவினர் மரணம்வரை மனிதவாழ்க்கை
உற்றார் உறவினர் காரியமாகும்வரை மிருகவாழ்க்கை
உயிர்பிரிந்ததும் அழுவதுபலகாலம் மனிதவாழ்க்கை
உயிர்பிரிந்ததும் அருகில்நிற்பதுசிலநிமிடம் மிருகவாழ்க்கை


எண்ணித்துணிக கர்மமெனநினைப்பது மனிதவாழ்க்கை
எண்ணியதும் உடனேமுடிப்பது மிருகவாழ்க்கை
சிறப்புடன் வாழநினைப்பது மனிதவாழ்க்கை
எதைப்பற்றியும் நினையாதுவாழ்வது மிருகவாழ்க்கை

சிறியதவறை மன்னிப்பது மனிதவாழ்க்கை
எல்லாதவறையும் தண்டிப்பது மிருகவாழ்க்கை
மானிடராய் பிறந்தபின் மிருகக்குணத்தை தவிர்த்து
வருங்கால சந்ததினர்கு நல்வழி கட்டிடுவோம் வாரீர்!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (22-Dec-13, 12:24 pm)
பார்வை : 109

மேலே