காதல் உளறல்கள்

காதோரம் ரகசியம் சொல்கையிலே - நான்
கற்பனையில் ரோஜா இதழ் மென்றேன்
கவிதை என்று எதை நான் சொன்னேன்
காதல் கனவினிலே கன்னி அவள் என்றேன்...!!
கூந்தலோர ரோஜா வாசம் எனைக்
குழைய வைத்தே காதல் பேசும்.....என்
இமை விளிம்புகள் ஹேர் பின்னில் இடற
இன்னிசையே எனக்குள் மவுனம்...!!
சொற்களின்றி பேசுவதே
சொர்க்கமென்பேன் காதலில் நான்...
சுகமென்று சொல்வதெல்லாம்
சும்மா சும்மா உளருவதே....!!!