துளி மை அல்ல

நம் நட்பை பற்றி
எழுத நினைத்து
தொடங்குகையில்
சிறு நிமிடம் கூட
நிற்ப்பதில்லை
என் பேனா

சற்று நின்று
போனாலும்
உதறி மீண்டும்
எழுத முயற்ச்சிக்க
விடுவதில்லை
என் மனம்

பேனாவின்
உதறலில்
விழுவது
ஒரு துளி
மை அல்ல
உன்னை
தாங்கிய
என் உணர்வுகள்

எழுதியவர் : கவியாழினி (23-Dec-13, 5:36 pm)
Tanglish : thuli mai alla
பார்வை : 253

மேலே