மனம் தளராதே தோழா - நாகூர் கவி

மலர்ந்த பூக்களெல்லாம்
மாலைகளாய் ஆவதில்லை
வளர்ந்த மரங்களெல்லாம்
வாசற்கதவுகளாய் ஆவதில்லை... !

விளைந்த கற்களெல்லாம்
மோதிரமாய் ஆவதில்லை
விழுந்த மழைத்துளிகளெல்லாம்
உயித்துளியாய் ஆவதில்லை... !

எழுதும் வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் ஆவதில்லை
உழுத நிலங்களெல்லாம்
விளைச்சல்களாய் ஆவதில்லை... !

பிறந்த மனிதர்களெல்லாம்
மேதைகளாய் ஆவதில்லை
திறந்த மனங்களெல்லாம்
புனிதர்களாய் ஆவதில்லை... !

நேசித்த இதயங்களெல்லாம்
காதலாக ஆவதில்லை
வாசித்த இசைகளெல்லாம்
சிம்பொனியாய் ஆவதில்லை... !

இணைந்த கைகளெல்லாம்
நம்பிக்கையாய் ஆவதில்லை
மணந்த பெண்களெல்லாம்
மல்லிகையாய் ஆவதில்லை... !

தொடங்கும் கட்சிகளெல்லாம்
ஆட்சிகளாய் ஆவதில்லை
இசைக்கும் பாடல்களெல்லாம்
விருதுகளாய் ஆவதில்லை... !

செய்த சிலைகளெல்லாம்
தெய்வங்களாய் ஆவதில்லை
புனைந்த கவிகளெல்லாம்
பரிசுகளாய் ஆவதில்லை...!

எழுதியவர் : நாகூர் கவி (23-Dec-13, 6:41 pm)
பார்வை : 1405

மேலே