தலைகீழ் மாற்றம் தந்தாய் என்னுள்

கற்கண்டின் படிகம் ஊடே
காரமிலம் கொண்டது காதல்
பற்கடியில் பதற்றம் பரவ நேருதோ
திக்கெட்டின் கட்டை அறுத்து திரளாக
திரிவது காதல்
திக்காட வைப்பது தான் அதன் வேலையோ
பௌர்னமியில் புணரும் பவழம்
நுண்ணுயிரை உணவாய் பருகும்
எண்ணுயிரை உணவாய் பருக
பௌர்னமியாய் வந்தது காதல்
நாவு தழுவி ழகரம் நகரும் அழகு காதல்
கட்டி வைத்து கருணை காட்டும்
பெறுமைதனை கொண்டது காதல்
எட்டி எட்டி பார்த்து மெல்ல
எட்டு வைக்கும் குழந்தை காதல்
அரத்தியினை அளவாய் அறுத்து
பொறுத்திய உதடுகள் உரைக்கும்
அத்தனையும் காதல்
புருவத்தின் மத்தியில் உணரும்
புரியாத பேருணர்வு காதல்
ஆண்மையின் உச்ச விளிம்பில்
ஒளிந்துள்ள பெண்மை காதல்
தோல்வி வென்ற வெற்றியினை
தோல்வியுற வென்றது காதல்
படிகம் - Crystal
அரத்தி - Apple