வரிசை

பெத்தெடுக்க மருத்துவமனையில் வரிசை...
பச்சை குழந்தைக்கு மருந்து ஊத்த வரிசை ...
பால்வாடியில் குழந்தையை சேர்க்க வரிசை ...
பள்ளிகூடத்துல அனுமதி வாங்க வரிசை ....
பள்ளிக்கூடம் போனாலும் வரிசை ...
பஸ்சுல ஏருவதுக்கும் வரிசை ...
பால் வாங்க போனாலும் வரிசை ...
பாபா படம் டிக்கெட் வாங்க போனாலும் வரிசை ..
பெட்ரோல் வாங்க போனாலும் வரிசை ...
மண்ணெண்ன வாங்கபோனாலும் வரிசை ...
பணம் போட போனா வங்கில வரிசை ..
பணம் எடுக்க போனா நிக்குறாங்க வரிசை ...
மளிகை பொருள் வாங்க வரிசை ...
வாங்கிய பொருள அடுக்கிவெக்க வரிசை..
சும்மா கொடுத்த பொருள வாங்க போனாலும் வரிசை ...
அம்மா கொடுத்த பொருள வாங்க போனாலும் வரிசை ....
வடைக்கு கூட வரிசை ...
வட்டி வாங்க போனாலும் நிக்கணும் வரிசை ...
வைரமுத்து கவிதை வாங்கணுன்ன வரிசை ..
வல்லரச பாக்கபோனுன்னாலும் நிக்கணும் வரிசை..
தண்ணி அடிக்கிறதுக்கும் வரிசை ...
தண்ணி பிடிக்கிறதுக்கும் வரிசை ...
லட்டு வாங்க போனுன்னாலும் நிக்கணும் வரிசை ..
லண்டனுக்கு போனுன்னாலும் நிக்கணும் வரிசை..
தங்கம் எடுக்கனுனாலும் வரிசை...
தங்கச்சிக்கு கொடுத்து அனுப்பனு சீர் வரிசை...
ரயில் டிக்கெட் எடுக்க வரிசை ...
எடுத்த டிக்கெட்ல போறதுக்கும் வரிசை...
ஓட்டு போட போனாலும் வரிசை ....
ஓட்டு வாங்கனவங்க வீட்டுக்கு போனாலும் வரிசை
ஓட்டுனர் உரிமம் வாங்க வரிசை...
ஓட்டாண்டியா கோயிலில் நின்னாலும் வரிசை..
வரிசை வரிசை வரிசை வரிசை வரிசை வரிசை