நில் என்று சொன்னது உன் விழிகள்

வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
வேகமாக வந்து
முட்டி மோதி நிற்கும்..

உன்
விழிகள் வெளிப்படுத்தும்
ஒருவித ஒளிக் கீற்றுகளைக் கண்டு..

மௌனம் அங்கே..
மௌனமாய் கடந்து செல்லும்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (23-Dec-13, 10:23 pm)
சேர்த்தது : வெ கண்ணன்
பார்வை : 94

மேலே