ஆப்பர் தரேன் ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாமா

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்..

ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு .. . .
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்..
.மே ஐ ஹெல்ப் யூ !! . "நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ? . "வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..
! எதுக்கு போன் போ
ட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!" "கோவப்படாதிங்க மேடம்...!
கல்யாணம் ஆய்டிச்சா ?" "இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?" . "இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.." . ".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! " .
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்னை லவ் மேரேஜ் பண்ணா... ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்... அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்!! . "சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல .. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?
. இப்ப புரிதா !!.. நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!!

எழுதியவர் : சக்தி சிதறல் (26-Dec-13, 12:13 am)
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே