உறங்கும் கடவுள்

வரிசையில் இடம்பிடித்து
வெகுநேரம் காத்திருந்து
கடவுளை தரிசிக்க
ஆயத்தமானர் சிலர் ....
சிறுபணம் செலவழித்து
காத்திருக்கும் அனைவரையும்
நொடிப்பொழுதில் கடந்துசென்று
கடவுளின் அருள்வேண்டினர்
சிலர் ...
எதையுமே பொருட்படுத்தாமல்
இமைகளை திறந்தபடியே
உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்
கடவுள் ....