காற்றின் மொழி

அலையின் மொழி இசையால்
அசைவின் மொழி உணர்வால்
உணர்வின் மொழி பசியால்
பசியின் மொழி மடலால்
மடலின் மொழி எழுத்தால்
எழுத்தின் மொழி அமைதியால்
நிம்மதியடைகிறேன்
எழுத்து.கம நிறைவால்...!

நினைவால் நீ பேசும் மொழி
எம்மொழியோ?

கிள்ளை மொழியா?
மனதின் மொழியா?
சிரிப்பின் மொழியா?
ஆனந்தத்தின் மொழியா?
இதயத்தின் மொழியா?

இவையெல்லாம் சேர்த்துக்
கோர்த்த உயிரின் மொழியாம்
கவிதை குழவியின்மொழி
நிம்மதி பெரு(று) நிலையில் ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (28-Dec-13, 2:45 pm)
பார்வை : 610

மேலே