நேற்று இன்று நாளை
பூமித்தாயின் மேனியில்
பச்சைக் கமபளம்,
ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு
பச்சைப் புல் தரையாய்-
நேற்று..
பாதை போட்டுவிட்டான்
மனிதன்,
பூச்சுவெட்டுத் தலையாய் ஆனது
புல்தரை ஆங்காங்கே புற்களுடன்-
இன்று..
பின்தொடர்கிறான் மனிதன்,
புல்லும் இருக்காது
மண்ணும் இருக்காது
போய்விடும் எல்லாம்-
நாளை...!