விழி பிதுங்கும் விலைவாசி
தலைமீது
கூரிய கத்தி
2013 முடிவதற்குள்
உயர்ந்து நிற்கிறது…………………!
ஓட்டுப் போட்ட மக்கள்
விழி பிதுங்கி நிற்கையிலே
தெம்மாங்குப் பாட்டுப்பாடும்
அரசியல்வாதிகள் சவடாலாய்
விலை ஏற்ற
அறிவிப்புச் செய்வதில்
தொலைக்காட்சி அறிவிப்பாளர்
தோற்பர்……………………!
இவர்கள்,
ஐந்தாண்டுக்கொரு முறை
அணிசல் வெட்டும் எஜமாங்கள்
அடுத்த தலைமுறைகளை துறந்தவர்கள்
மக்களின் அமைதியை
வேரோடு அறுத்து
இரத்த ஆற்றை
கண்ணில் ஓடவிட்டு
வேடிக்கைப் பார்க்கும்
மன்னாதி மன்னர்கள்………………!
வயிற்றுப்பசி
தினம் உயிர் போராட்டம்
உண்ணும் உணவும்
படுக்கும் மனையும் பறிபோகும்
மக்கள் சாபம்
நெஞ்சம் மறக்குபோமோ……………..?
மக்கள் அரசு
பரிவுடன் பாசமுடன்
மக்களைக் காக்கும்
ஒரு தாய் மக்கள் நாம்
வஞ்ச எண்ணம் ஏற்குமோ………………?
விலையேற்றம் மக்கள்
மனதில் கலவரம் அமைச்சருக்கு
உடம்பெல்லாம் பரவசம்
சீமான்களுக்கு வருமானம்
கூரையைப் பிய்த்துக் கொண்டு……………….!
ஆடம்பர மன்னர்கள்
விமானப்பயணம்
கப்பல் போன்று மகிழுந்து
பெட்ரோல், டோல்
இலவசம்,இலவசம்……..!
ஏழைகள் பாடு
தண்ணீர்,மின்சாரம்
விலை ஏற்றம்
ஏமாற்றம்…….ஏமாற்றம்……………!
அமைச்சர் முகங்களில் புன்னகை
மக்கள் மனதில் சுனாமி
வரவேண்டும் நல்ல தீர்ப்பு……………………!