நாளை என்பது நாட்காட்டியில் மட்டும்

செடிக்கு சுமயெனக் கருதி
சீக்கிரம் உதிருமாம் பூவு...........

**பூக்கள் மணக்க மறுப்பதில்லை***

மடிக்கு கணமெனக் கருதி
வேகமாய் கரையுமாம் காசு

**காசும் மதிப்பில் குறைவதில்லை***


மண்ணுக்கு வலியென எண்ணி
விரைந்து முடியுமாம் வாழ்வு...

**வாழ்விலும் மகிழ்வுக்கு பஞ்சமில்லை...***


இருமெய் தனித்த வார்த்தை இல்லை
வெறுமை அடர்ந்த வாழ்வும் இல்லை...
வறுமை மனதில் அண்ட விடாமல்
மறுமை இன்பமும் இப்போதே காண்போம்...


நீரோடும் பாதையிலே குன்றும் குழியாகும்
நீயாடும் வாழ்வினிலே குறையும் நிறையாகும்
யாரோடும் இணையாக ஏன்என்ன வேண்டும்
பாரோடு இணையாக வேறிருந்தால் கூறும்...


இல்லாத ஒன்றை எண்ணுவான் ஏனோ?
பொல்லாத சொப்பணம் காணுவான் ஏனோ?
செல்லாத காசாகும் சேர்த்துவைக்கும் நோட்டு
நல்லநாள் இன்றுதான் ஆனந்தயாழ் மீட்டு....


நாளை என்பது நாட்காட்டியில் மட்டும்....
நாடோடி தென்றலாய் குளிர்ந்துநீ வாழ்ந்திடு ..
வேளை என்பது இப்போது மட்டும்...
திளைத்து ருசித்து எப்போதும் வாழ்ந்திடு...

எழுதியவர் : காசி. தங்கராசு (29-Dec-13, 3:31 am)
பார்வை : 96

மேலே