விருதுக்கு நன்றி
எண்ணம் என்று
எழுத்தில் எதையோ
வண்ண தமிழில்
வரைந்தேன். அது
கவிதை என்று
சொன்னது நீங்கள்
கிறுக்கல் என்றே
சொன்னது நான்.
பந்தம் என்று
தளத்தில் அனைவரையும்
சொந்தம் கொண்டு
பாராட்டினேன். அது
நட்பு என்று
சொன்னது நீங்கள்
உறவுகள் என்று
சொன்னது நான்.
நீங்கள் சொன்னதும்
நான் சொன்னதும்
அர்த்தம் ஒன்றுதான் என்பதால்
முத்தம் கொடுத்து
”நட்புணர்வு பரப்பு நற் படைப்பாளி-2013 ”
என்று
குமரி நண்பனுடன் எனக்கும்
பட்டம் கொடுத்துவிட்டார்
அகன் ஐயா!
பட்டத்தில்
எங்கள் பெயர்
பட்டம் பறக்கிறது
உங்களின் பெயரில்..
ஆம்
பட்டம் நாங்கள் என்றாலும்
நூல் உங்கள் கையில்..
புதுச்சேரியில் இருந்து
திருப்பூருக்கு வந்துவிட்டது
இந்த பட்டம்.
புதுச்சேரியிலிருந்து வந்தது
என்பதால் என்னவோ..
“போதை” ஏறியது எனக்கு.
”சந்தோஷ போதை”
தோழமைகளே !
உறவுகளே !!
விருது உங்களுக்கே
சமர்ப்பணம் !!
இந்த தளத்தில் எனக்கான
முதல் விருது கொடுத்த
“இணையதள படைப்பாளிகள் பேரவை” க்கு
என் மனமார்ந்த நன்றிகள் !