சனிக்கிழமை சாயங்காலம்...!!!!


சனிக்கிழமை சாயங்காலம்
அலுவலக எரிச்சலையும்
தேவையில்லா வெறுப்புகளையும்
இருக்கையின் இழுப்பறையில் பூட்டிவிட்டு
ஞாயிற்றுக்கிழமையின் எதிர்பார்ப்புகளோடு
வீடுதிரும்புகயில்
நாளையும் அலுவலகம் என்ற
குறுஞ்செய்தியோடு சிணுங்குகிறது
கைப்பேசி
திறந்துப் பார்த்தால்
குருன்செய்தியின் ஓரத்தில் சிரிக்கிறது
அலுவலக எரிச்சலும்
அலுவலகத்தின் மீதான கோபமும்...!!!!


எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (2-Feb-11, 5:33 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 346

மேலே