எனக்கான கிறுக்கலே

காத்திருந்த தருணங்களில் - என்
கண்கள் மேய்ந்த நுனிப்புல்லின்
அடியிலிருந்த கன்னிகள்
அதிஷ்டசாலிகள்
தப்பி விட்டார்கள்...
தப்பி உடன் படித்தவள்...
என்னவளாகி விட்டாள்..

திட்டமிட்ட இச்சதியில்
திருடு போன இதயங்கள்
கிட்டவில்லையடி இன்றுவரை...

அலைபேசியின் செயல்பாட்டுக்காய்
அமைக்கப் பட்ட வழித்தடங்கள்
கடத்தியதென்னவொ - நம்
காதலைத்தான்...

குருஞ்ச்செய்தியின்
குறுக்கீட்டால்
மறைந்து போகிறது
இரவில் முளைத்த கோபங்கள்
பகலுக்குள்..

மானமெல்லாம் காணோமடி
மழுங்கிப் போயின காதல் முன்னே
ரோசங்களை புதைத்த இடத்தில்
பூத்திருக்கிறது நம் காதல்

கருப்பு இரவுகள் தோறும்
எருக்களிக்கும் உன் நினைவுகளுக்காக
மறக்காமல் துயில் கொள்கிறேன்..
கனாவில் உன் கரம் பிடிக்கிறேன்...

பனியில் வெந்த அரளிப் பூக்கள்...
பகலுக்காக காத்திருக்கும்
பாவை உன் போல...
பகலவனாய் வந்திடுவேன்...
உனை முழுதும் ஆட்கொள்வேன்...

ஆழி தேடிப் போனவனை
சிற்றணைக்குள் அடக்கி விட்டாயடி...
உனை மீற மறந்தேனடி - (நீ)
வேண்டுமென்றே விழுந்தேனடி..

எனக்கான கிறுக்கலே
இறைவனிடம் கேட்பது ஒன்று தான்...
இரு தாயும் இல்லாத உலகை - என்
விழி காணக் கூடாது...

எழுதியவர் : செல்வா பாரதி (30-Dec-13, 5:59 pm)
பார்வை : 125

மேலே