என்னுடைய குட்டி பூ

காட்டிலே ஒரு பூ
அழகான் பூ பூத்தது
அது காட்டுப் பூ.

சேற்றிலே ஒரு பூ
செம்மையான பூ கிடந்ததது
அது சேற்றுப் .பூ

தோட்டத்திலே ஒரு பூ
வெளிர் நிறத்தில் விரிந்தது
அது தோட்டப் பூ


விட்டிலே ஒரு பூ
என் வயிற்றில் உண்டானது
என் குட்டிப் பூ .

பூத்து குலுங் கியது
படுத்து தவழ்ந்தது
நடந்து ஓடியது.

படித்து சிறந்தது
மனம் புரிந்தது
என்னை மறந்த்தது.

தன வீடு தன குடும்பம்
என்று வாழ்கிறது
ஆனந்தமாக .

மனம் பரப்பி
இனத்தை பெருக்கி
பிஞ்சும் பூவுமாக தழைக்கிறது .

மரமும் கொடியுமாக
வாழ்வாங்கு வாழ்கிறது
என்னுடைய குட்டிப் பூ

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Dec-13, 11:05 pm)
Tanglish : ennudaiya kutti poo
பார்வை : 1302

மேலே