நட்சத்திரங்களே நட்சத்திரங்களே

வானில் மின்னும் நட்சத்திரங்களே
இரவை ஒளி மயமாக்கும் சித்திரங்களே
துள்ளிச் சிதறும் கோலங்களே
நீவீர் எவ்வாறு நின்று நிடிக்கிறீர் ?

கருமையில் தோன்றும் அழகுக் கூட்டமே
தீப் பொறி போல் வட்டமிடும் சுடரே
அங்கு ஒன்று இங்கு ஒன்றாகச் காட்சித் தரும் பாங்கே
நீவீர் எப்படி திரண்டு நிற்கிறி ர் ?

கார்மேக வண்ண மேகக் குவியலிலே
ஓடி விளையாடும் மினமினி தொடர்களே
அவ்வப்போது கண்ணா முச்சி ஆடும் விழிகளே
நீவீர் என்ன விதத்தில் தோன்றி மறைகிறிர் ?

நட்சத்திரங்களே வண்ண வானவில்லில்
கோலோச்சும் ஆனந்தச் சிகரங்களே
அற்புதமான பொலிவிலே மெருகூட்டும் திருவே
நீவீர் எங்கிருந்து இவ்வனவு அழகை கொணர்ந்தீர்?

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Dec-13, 7:10 pm)
பார்வை : 2068

மேலே