பாலைவனம்- கவிதை

வீரம் குறைந்தால் மனிதன் கோழை
ஈரம் குறைந்தால் பூமி பாலை

மரங்கள் விலங்குகள் குறைய பெருகும் பாலை
தாவி ஊருக்குள் வரும் தார் பாலைவனம் நாளை

நிறைய மழை பெய்தால் சோலைவனம்
குறைய மழை பெய்தால் பாலைவனம்

பாலையில் வாழும் மனிதரிடம்
பொறுமையும் உண்டு வறுமையும் உண்டு

பாலைவனத்தின் வயிறு கள்ளிச்செடிகளையும் ஒட்டங்ககளையும் பெற்றெடுக்கிறது

பாலையில் பகலில் வெப்பம் விளையாடும்
இரவில் குளிர் அங்கே கூத்தாடும்

சூரியக்குடும்பத்தில் பூமியில் சிறிதும் செவ்வாயில் பெரிதும் பாலைக்குப் பங்குண்டு

சோலை குறையட்டும் பாலை பெருகட்டுமென
ஒட்டங்ககள் மட்டும் சொல்லட்டும்

சோலை பெருகட்டும் பாலை குறையட்டுமென
மனிதர்கள் பல்லவி பாடட்டும்

எழுதியவர் : damodarakannan (30-Dec-13, 7:09 pm)
பார்வை : 1814

மேலே