தமிழ் பேச்சு எம் மூச்சு
அன்னை தமிழை
அள்ளி பருக
ஆயுள் ஒன்று போதுமோ?
அமுதை மீண்டும்
நன்றே பருக
பிறவிகள் பலவே வேண்டுவேன்
இப்பிறவியில் ஈன்றவளுக்கே
மகனாய் யானும் பிறந்திட
தமிழ் பாலை
தாய் பாலாய் - ஊட்டிய (தந்த)
காரணம் ஒன்றே போதுமே
அன்னை தமிழை அலங்கரிக்க
கொடிகள் - தேவை இல்லையே
அவள் மொழியில்
சில வார்த்தை
பேசிடல் மட்டும் போதுமே
தமிழில் பேசுவோம்
தாயுடன் சேருவோம்