மாறுங்கள் தமிழர்களே

ஆண்டின் நிறைவிலே,
ஆங்காங்கே கொண்டாட்டம்.
ஆங்கிலயேர் ஆடாத ஆட்டம்,
ஆடுகிறோம் இங்கே.

நட்சத்திர விடுதி எல்லாம் ஆர்ப்பாட்டம்.
தலைக்கு இரண்டாயிரம்,
கணவன் மனைவிக்கு நாலாயிரம்.

விடிய விடிய கூத்தடித்து,
கூடி கும்மாளம் போட்டு,
கண் விழித்து நள்ளிரவில் (12.01am)
ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை,
பிரசவிக்கும் தமிழ் நாட்டு மேதைகள்..

சாப்பாடு,விளையாட்டு எல்லாம் மேம்போக்கு.
மேல் நாட்டு சரக்கு தண்ணீராய் ஓடுது.

சேர்த்துக் கொடுத்த பணம்
கூட்டிப்பார்த்தால்,படிக்க வைக்கலாம்
பல நூறு பிள்ளைகளை.

நினைத்துப் பார்ப்பவர் உண்டா ?
நிலைமையை உணர்ந்தவர் உண்டா?
எடுத்துச் சொன்னாலும் கேட்பவர் உண்டா?

மாற்றுங்கள் நம் தமிழர்களை !
மாறுங்கள் தமிழர்களே !

எழுதியவர் : arsm1952 (31-Dec-13, 5:14 pm)
பார்வை : 139

மேலே