இந்த இதய வீணையை 2

வீணையின் நாதங்கள்
ராகங்களே
வேதனையில் மீட்டினால்
அதுவும் சோகங்களே
காதலின் பாடல்கள் கீதங்களே
தோல்வியில் அவையும்
துயரின் ராகங்களே
கண்ணீரில் எழுதிய
சோகத்தின் சித்திரங்களே !

சோகங்களின் சுமை சுமந்து
வழி நடந்த சுரங்கள்
விரல் வழியே ஊர்வலம் போக
இந்த இதய வீணையை
ஒரு மௌனத்தின் ஏகாந்தத்தில்
மீட்டுகிறேன்
சோகத்தின் ராக தத்துவங்களாய்
இதய நாதத்தின் ஜீவ துடிப்புகளாய்....

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (1-Jan-14, 7:43 pm)
பார்வை : 445

மேலே