தனிமையின் தாக்கம்
கவிதை எழுத கூட முடியவில்லை
காரணம் இந்த தனிமை...
யோசிக்கவோ நெஞ்சம் எண்ணவில்லை
காரணம் இந்த தனிமை...
அம்பினால் கொய்தாலும் வலிக்காது
ஆனால் அன்பானவர்களின் மௌனம்
அரக்கத்தனமாய் கொள்கிறது மனதை.....
நேசித்த இதயம் பதில் சொல்லுமா
என் தனிமைக்கு..