டிசம்பர் பூவே

பனிமூடும் மார்கழியிலும்
பற்பல நிறங்களில்
பகலவன் துயிலெழுகையில்
பளிச்சென பூப்பவளே ....!!

வாசமில்லா மலரானாலும்
வண்ணத்தால் வசீகரிப்பாய் !
வீட்டுத்தோட்டம் அலங்கரிப்பாய் !
விழிகட்கும் விருந்தளிப்பாய் .....!!

நங்கையர் சிகையேற
நாகரிகத் தடையோ ...?
நலிந்து விடுவாயோ ...?
நட்டம் யாருக்கோ ....??

மணக்கும் வரமொன்று
மகேசனிடம் நீயும்கேள் ...!
மணந்தால் மலர்வாய்
மங்கையர் கூந்தலில் ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Jan-14, 11:27 am)
பார்வை : 285

மேலே