காத்திருத்தல்
நீண்ட கடற்கரையில்
தூரத்து புள்ளியாய்
தோன்றும் நீ
மூன்றே நிமிடங்களில்
என்னை முழுமையாய்
வந்தடைவதைப் போல்
தூரத்து புள்ளியாய்
தோன்றும் நட்சத்திரங்கள் எல்லாம்
என்றேனும் ஒருநாள்
முழுமையாய்
என்னை வந்தடையும்
என்ற நம்பிக்கையில்
இரவுகளை எல்லாம்
மொட்டை மாடியில் கழிக்கிறேன்