நானும் அந்த சூரியனும் - நண்பர்கள்

ஹலோ ஹரி....! ஹவ் ஆர்யூ...! என்றே
காலைக் கதிரொளி கைகளை நீட்டியது.....!

இதோ தமிழ்.....! இனிய பூக்கள் என்றே
இதயம் திறந்து கைகளை நீட்டினேன்........!!

உனக்குள் வானவில் அதை நான் அறிவேன்
உன்னால் நானும் வண்ணமே அடைந்தேன்

உதட்டில் எதற்கு உனக்கு பிறமொழி
உடனே பழகு நம் தமிழ் செம்மொழி என்றேன்...!!

அதைப் படித்தால் நானும் குளிர்ந்தே போவேன்
அப்புறம் நிலவும் தோன்றாது மறையும்....

கவிஞரும் காதலும் கவலையில் புரள
காவியங்கள் வளராமல் நின்றே போகும்...

மழையும் பொய்க்கும் மண்ணுயிர் தோற்கும்
மனதில் வைத்துக் கொள் மலரே....

மற்றவர் நலனே என் நலமாகும் - அதனால் என்
மனசில் தமிழ் கற்பது நிராசையாகும்..!

டாட்டா....சீயூ....பை பை என்றே....
டக்கென மறைந்தது மாலையில் சூரியன்....!

இங்கிலீஸ் கான்வென்ட் சுவருக்கு
இந்தப் புறம் நான்....!!

மலை என உயர்ந்து இருந்தது
அதிக பீஸ் வாங்கி கட்டிய அந்த
கல்வி விற்கும் வணிக வளாகம்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Jan-14, 4:56 pm)
பார்வை : 93

மேலே