அக- ம் -வை

பழங்காலம் எனும் கோலம் களைந்து
நலம் வாழும் நன் நாளில் நுழைந்து
வளம் பேணி குலம் சாதி உடைத்து
நிலம் காக்க வடம் இழுக்க வாரீர் .
தடம் புரண்ட ரயில் கதை பழங்கதை
விடமற்ற புதுக் கதை தொடங்குதலை
ஜடமாக தூங்காமல் எண்ணம் கொண்டே
திடமாக எடுத்துக் கொண்டால நல்லதன்றே?
முடுக்கென்று பயந்துவிட்டால் இடுக்கன் தான்
சடக்கென்று புகுந்து விட்டால் வேறல் தான்
நமக்கென்று நாமே துணிந்து கொண்டால்
நமக்கொன்று வந்திடாமல் காத்திடலாம்
புதிதாக புதுமையான புத்தகங்கள் இயற்றிடலாம்
புத்தாக்கக் கருவிகளை நூதனமாய் மாற்றிடலாம்
எத்திக்கும் எங்கெங்கும் ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும்
புத்தாண்டு புத்தாண்டு ஜொலிக்கட்டும் ஜொலிக்கட்டும்