செவ்வாய் கிரகம் பாவம்தான்

மனிதர்கள்
செவ்வாய் கிரகக் குடியேற்றமாம்
வாய் இருந்தால்
கிரகம் அழும்தான்
கிரகத்திற்கே
கிரகம் பிடித்ததாய்!!!!

விஞ்ஞானிகளே சிந்தனைவாதிகளே
செவி சாய்ப்பீரோ சிறிதளவேனும்
பாதகமில்லை யாவர்க்கும்
செவ்வாய்க்கு அனுப்பி வையுங்கள்
அரசியல்வாதிகள் அத்தனை பேரையும்
பூமியாவது பிழைத்துக் கொள்ளும்!!!

செவ்வாய் நீ பாவம்தான்
எவன் எவன் வாய்தனிலோ
இனி நீ மெல்லப்படுவாய்
மெள்ள அவனவன் வசப்படுவாய்
கூறுபோட வருகிறார்கள்
பூமிக் கிராதகர்கள்
எதற்கும் நீ ஆருடம் பார்த்துக் கொள்
என்னாவாய் என்று!!!

தன்னிச்சையாய் இருந்த நீ
தூரத்தில் இருந்தாலும்
அழகாய்த்தான் தெரிந்தாய்
மனிதக் கல் வீச்சில்
இனி நீ தூசும் மாசுமாய்..
திணறப் போகிறாய்
பூலோகவாசி தாக்குதலில்!!!

அழகுச் சிவப்பில் சிங்காரி நீ
அடிதடி வெட்டுக் குத்தில்
இனி இரத்தச் சிவப்பில்
குருதிப் புனலில் நனைந்தே
கேள்வியும் தொடுப்பாய்
இந்த சிவப்பு என்னவென்று???

உன் சிவப்பில் குருதிசிவப்பு
மறைந்தே போய்விடுமாம்
தவறுகளும் சேர்ந்தே
தவறான எண்ணத்தில்
தரைவாழ் ஆறறிவாளர்கள்!!!

வேட்டுசத்தமும் வெடிச்சத்தமுமாய்
இனி கேட்டுக் கொண்டிருப்பாய்
பயந்து விடாதே பாவிகள் கண்டு
அநியாயம் கண்டாய் என்றால்
நீயும் அதிர்ந்து பிளந்துவிடு
அத்தனைபேரும் ஒரே சமாதியில்....
அடுத்த மனித வரவு
உன்னுள் இல்லாது போகும்...
பூமி பாழ்பட்டது போதும்
நீயாவது புனிதமுடன் இரு!!!

எழுதியவர் : சொ. சாந்தி (3-Jan-14, 3:13 pm)
பார்வை : 244

மேலே