என் உயிரினும் உயிரான-1

ராகவி அழகும் அறிவும் நிறைந்த சராசரி குடும்பத்து பெண் .பெண்மையின் இலக்கணம் புரிந்து பொறுமையும் அடக்கமும் அணிகலன்களாய் கொண்டிருப்பவள் .அனைத்து நற்குணங்களையும் ஒருசேர பெற்றவள் என்பதால் அனைவராலும் அன்பு செலுத்த படுவாள் .அம்மா ,அப்பா ,அண்ணன் ,தங்கை மற்றும் உயிர் தோழி சந்தியா இதுதான் அவள் உலகம் பள்ளி பருவத்தை முடித்து விட்டு கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்தாள்.இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன கல்லூரி செல்வதற்கு உயிர் தோழி சந்தியாவும் தானும் ஒரே கல்லூரியில் சேர போவதால் இன்னும் அதிக ஆனந்தம் அவர்கள் இருவருக்கும் .இருக்கதானே செய்யும் இவர்கள் நட்பு மழலை பருவத்திலே ஆரம்பித்து விட்டது .படித்தது ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ..சாப்பிடுவது ,விளையாடுவது என்று அனைத்திலும் ஒருமித்தே காணபடுவர்கள்.

சந்தியா ,கோடீஸ்வரர் தர்மராஜின் அனைத்து சொத்துக்கும் ஒரே வாரிசு ,தைரியமான பெண் எதையும் துணிச்சலாக எதிகொள்ப்வள்.தவறு என்று தெரிந்தால் நேருக்கு நேராக கூறிவிடுவாள் அது எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் சரி .ராகவியின் பயந்த குணத்தை மாற்ற முயற்சிகள் பல செய்து பார்த்தாள் ஆனால் முடிய வில்லை அவளால் .பணக்காரி என்ற எண்ணம் இல்லாமல் ராகவியுடன் நல்ல தோழியாக இருந்தாள். சிறு வயதிலிருந்தே தனக்கு கிடைத்த அத்தனையும் ரகவிக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பாள்.எந்த பொருள் வாங்கினாலும் 2 ஆகதான் வாங்குவாள் .அதை ராகவிக்கு கொடுத்து சந்தோஷ படுவாள் .இவர்கள் இருவர் நட்பு ஊருக்கே தெரியும் .

இருவரும் கல்லூரிக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது .ராகவி தயாராக இருந்தாள் சந்தியா சரியாக 8:00 மணிக்கு வருவதாகவும் நீ தயாராக இரு என்றும் முன்தினமே சொல்லிவிட்டாள்.சந்தியா தனது காரில் வந்தாள் உயர் தர ஜீன்ஸ் அண்ட் ட்ஷிர்ட் அவளுக்கு இன்னும் அழகை சேர்த்தது. ராகவி தனக்கு பிடித்த ப்ளூ கலர் சல்வார் அணிந்து இருந்தாள் .இருவரும் எல்லையில்லா ஆனந்தத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் கல்லூரிக்கு செல்கின்றனர் .

இவர்களின் கனவுகள் நிறைவேறுமா,உயிரினும் மேலாக கருதும் இவர்களின் நட்புக்கு ஏதேனும் இடையூறுகள் வருமா .கல்லூரி வாழ்க்கை இவர்களுக்கு எவ்வாறு அமைய போகின்றது


காத்திருப்போம் ................

எழுதியவர் : சாலினி பிரியா (4-Jan-14, 12:05 pm)
பார்வை : 178

மேலே