இயற்கையும், அவளும்,,,,,
அவள் வெளியே உறைந்திருக்கின்றாள்
===============================================
அவளை இழுத்து உள்ளே வைத்து தாளிட முயற்சிக்கின்றது இருள் பூசிய சுவர்களில் கட்டிய கதவு;
வேதனைகளை பிரசவிக்கவே அவள் வெளியே உறைந்து கொண்டாள்; முதலில் கண்ணீர் வெளியேறுகின்றது .
...
வாசலில்;
இலைகளையெல்லாம் தின்று சருகுகளை எச்சமிட்டுள்ளது வெயில்-
காற்று வந்து மரங்களை கொல்லும்.
வானம் இறங்கிக்கொண்டிருக்கிறது ; இன்னும் கொஞ்சம் இருட்டினால் அது வாசலில் வந்து விளையாடும்.
அவள் உள்ளே இழுக்கப்பட்டதும் அவளிடத்தை மேகம் கண்ணீரால் நிரப்பும்.
தனிமையை கட்டி உறங்குவதிலேயே அவளுக்கு கொள்ளை இன்பம்.