சூது விரும்பேல்
கொக்ரக்கோ கொக்ரக்கோ
கொக்கரிக்கிறது கோழி
கொத்தி தின்ன தீனி
இல்லையோ...?
புத்தி சொல்ல
நாதி இல்லையோ ?
இந்தியாவில்
கூவும் சேவலுக்கு
அமெரிக்கா
விடிந்திடுமா ?
ஏளனம் பேச முற்பட
ஏற்பாடுகள் எக்காளமிடுகிறது
அறியாதோர் சொல்லி
அறிவாளிகள் ஆடலாமா?
பருந்து போல
பறக்க இயலவில்லையோ?
விருந்து உண்ண
விளம்பரம் தேவையோ ?
மெட்டுக்கள் இருந்தும்
பாட்டுக்கள் பாடவில்லையோ?
மொட்டுக்கள் பூத்தும்
வண்டுகள் வரவில்லையோ?
நாளைய நாற்காலிக்கு
நாலாப்புறமும் கால்கள்
கூட்டணி பேரத்தில்
எவரிடம் எந்த கால்களோ?
முக்கால்களை வென்றாலும்
விழுக்காட்டில் எவர்
செங்கோலை பிடித்திடுவர்?
நான்காம் கால்
எவரிடம் ?
எவர் காலில்
எவர் விழுவர் ?
சுப்பனுக்கும் குப்பனுக்கும்
சூத்திரம் தெரியுமோ ?
சேதாரமின்றி
புகழாரம் கிடைத்துவிடுமா?
எவரின் ஆட்சி
கோட்டையை
செங்கோட்டையை
ஆளப்போகிறதோ ?
======================>இரா.சந்தோஷ் குமார்