உனக்காக காத்திருந்த நிமிடங்கள்
முதல் முறையாக
முகம் தெரியாத நண்பனுக்காக
முகவரி தெரியாமல்
காத்து கிடந்தேன்....
நீ யாராக இருப்பாய் என்று
தெரியாமல்
அலைபாயும் மனதாக நான்....
கடிகாரமும்,
கண்களும்
சண்டை போட்டு கொண்டன...
உன் வருகையை எதிர்பார்த்து...
என் உள்ளமும்
உதடுகளும்
பேசி கொண்டன....
நண்பனின் வருகையை எண்ணி...
என் இருதயத்தில்
விவரிக்க முடியாத வலியாக இருந்தது...
உன் வருகைக்காக காத்திருந்த
அந்த கடைசி நிமிடங்கள்.....