நிலாத்தோசை

'பசிக்கிறது
சீக்கிரம் சுட்டுத்தொலை'
அடிவயிற்றை அமிலம்
அரித்தது பொறுக்காமல்
மனைவியை வைதபோது
'அதான் பெருசா இருக்கில்ல
முதலில் அதைச் சாப்பிடு'
நிலாவைக் கைகாட்டிச்
சிரித்தது குழந்தை

எழுதியவர் : சதீஷ்குமார்(கவியன்பு) (5-Jan-14, 11:00 pm)
பார்வை : 69

மேலே