அம்மா

அம்மம்மா உன்னை நினைக்காத நாள் இல்லை
ஒவ்வொரு நினைவு நாளிலும்
அன்று நீ எனக்காக வாழ்ந்தாய்
இன்று புரிகிறது
அன்றே புரிந்திருந்தால்
இன்று அழ மாட்டேன்

காலையில் எழுந்தாய்
என்னை குளிப்பாட்டி
தலை சீவி இருந்த
துணியில் நல் உடை உடுத்தி
பள்ளிக்கு செல் என் செல்லமே என்று
என்னை தழுவி வழி அனுப்புவாய்
நானும் உன் காலை கட்டிக்கொண்டு அழுவேன்
எதிர்காலம் பற்றி எனக்கு எடுத்துரைத்து
செல்ல முத்தம் தந்து என் உடனே பள்ளி வரை
வந்தாய் உன் பார்வை விட்டு நான் மறையும் வரை
நின்று பின்பு செல்வாய்...

படிக்க பிடிக்காமல் விளையாட சென்றேன்
அப்பா அடிப்பார் அப்போதும் நீ
எனக்கு பரிந்தே பேசி அரவணைப்பாய்


காலங்கள் ஓடின கல்லூரி வரை கொண்டு
சென்றாய் தத்தி தத்தி நானும் சென்றேன்

என் படிப்பிற்காக நீ எல்லா சந்தோசங்களையும் இழந்தாய்
பொன் பொருள் சொத்து எல்லாம் இழந்தாய்
இறுதியில் கணவனையும் இழந்தாய் அம்மா ....

பணிக்கு செல்லும் நேரம் வந்தது
சந்தோசமாக இருந்த என் முகம்
சங்கடம் கொண்டது
உன்னை விட்டு ஒரு நாலும் பிரிந்ததில்லை

பட்டணம் போனேன் பலரின் நட்பும் கிடைத்தது
அங்கு தடம் புரண்ட என் மனம்
மீளவே இல்லை அம்மா ...

பணி சுமை ஒரு புறம் உன் நினைவு
நட்பென நம்பினோர் எனை மதுவுக்கும்
மாதுவுக்கும் அழைத்து சென்று வீழ்த்தினர்

அன்று வீழ்ந்த நான் இன்றும் மீளவில்லை
ஒருநாள் தகவல் வந்தது
நீ மரணத்தை தழுவி விட்டாய் என்று ...

எனக்காக செலவழித்த உன் வாழ்க்கை
உனக்காக நான் ஏதும் செய்யவில்லை

கண்ணீர் துளியை தவிர
என் தந்தை இழந்த வருத்தம்
வராமல் நீ காத்தாய்
இப்போ உன்னை காக்க
நான் மறந்தேனே !!

அம்மா நீ இருந்த வரை தெரியவில்லை
உன் மதிப்பு
இப்போது அழுகிறேன்
அனாதை என எல்லோரும்
என்னை அழைக்கும் போது

உன்னை நினைக்காத நாள் இல்லை
ஒவ்வொரு நாளும் உன் நினைவு நாளே ...

எழுதியவர் : kanagarathinam (6-Jan-14, 2:09 am)
Tanglish : amma
பார்வை : 182

மேலே