தமிழே என் தலை எழுத்து

கவிதை எழுத புத்தகம்
கண்களில் சிறைபடா பரந்த பூமி

கீழ் விழும் கதிரொளி என்
கிறுக்கலுக்கான எழுதுகோல்....

பூக்களெல்லாம் மெய் எழுத்து
புலர்ந்த பொழுது உயிர் எழுத்து

தனை மறந்து எழுதுகிறேன்....
தமிழிலே என் தலை எழுத்து......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Jan-14, 3:33 am)
பார்வை : 192

மேலே