ஏ புள்ளைகளா

ஸ்பென்சர் பிளாசாவில்
ஜீன்ஸ் வாங்க
அப்பாவிடம் 1500
கேட்கும் எம்.எஸ்.ஸிக்கும்


பேஷியல் செய்வதற்காய்
கண்ணாடி அறைக்குள்
சாய்வு நாற்காலியில்
மல்லாந்து படுத்திருக்கும் எம்.பி.ஏ வுக்கும்


பதவியேற்பு முடிந்த பிறகு
அறையைச் சுத்தபடுத்தும் போக்கில்
தொங்கிக் கொண்டிருந்த
காமராசன் படத்தைக் கழற்றி
நடப்பு முதல்வர் படத்தை
மாட்டிய ஐ.ஏ.எஸ் - இக்கும்

புரிவதே ...இல்லை.
பெயருக்கு முன்னுள்ள
இனிசியளுக்கும் அப்பனும்
பெயருக்குப் பின்னுள்ள
பட்டதுக்க் அவனும்
காரணமென்று...














(சம்பளச்சோறு தின்ன ஒரு பொழுதில் நினைவில் வந்த காமராசருக்கு)

எழுதியவர் : சதீஷ்குமார்(கவியன்பு) (5-Jan-14, 10:21 pm)
பார்வை : 95

மேலே