ஆசிர்வதித்திடு தமிழன்னையே

அஃறிணையான கணினியில் ஆனந்தமாக உலா வருகையில்,
ஔவையாரின் ஆத்திச்சூடியில் முதல் விழியினை பதித்து,
ஓராயிரம் பதிவுகளின் உயிரோட்டத்தில் மெய்மறந்து,
ஒவ்வொன்றிலும் தித்திக்கும் தேனமுத தமிழ் மொழியினை,
ஐயங்கள் இன்றி நான் கற்றுத் தேறிடனுமே.......
ஏக்கங்களுடன் உமை இறைஞ்சுகின்றேன் தமிழ்த்தாயே..!
எட்டுத் திக்கும் ஏகாந்தமாய் நறுமணம் பரப்பும் தமிழ்மொழியை,
ஊஞ்சலில் சிம்மாசனமிட்டு உச்சியில் நிறுத்திட,
உற்சாகமாய் தாலாட்டுவேன் தமிழன்னையே....
ஈடு இணையற்ற உன் தித்திக்கும் தமிழ்பாலை,
இனியும் காலந்தாழ்த்தாமல் எமக்களித்துவிடு...
ஆயிரமாயிரம் பாடல்களை நான் இயற்றி,
அகிலமெங்கும் உமது புகழ் மணக்க செய்திடுவேன்....

(தலை கீழாக நின்று மன்றாடினாலாவது, தமிழன்னையின் அனுக்கிரகம் எமக்கு கிட்டட்டுமே என்ற நப்பாசையில்........)

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (6-Jan-14, 8:39 am)
பார்வை : 161

மேலே