அக்மார்க் இந்தியன்

இங்கே
கார் வாங்க கடன் பத்து சதவிகிதம்
கல்விக்கடனோ பன்னிரண்டு சதவிகிதம்


இங்கே
விவசாயிகளுக்கு வரிச்சலுகை கொடுக்க
விவாதிப்பதோ குளிரோட்டப்பட்ட அறையில்

இங்கே
அடிப்படை வசதிகள் கூட
இல்லாத அரசுப்பளிகள்

இங்கே
அரசியல் என்னும் பேரில் சண்டையிலும் கலவரத்திலும் மக்களை தூண்டிவிடும் அரசுகள்

இங்கே
அண்டைமாநிலங்களுக்கு இடையே உள்ள குடிநீர்
பிரச்னையை கூட அரசியலாக்கி
உழைத்து பிழைக்கும் மக்களின் வயிற்றில் வெந்நீர் வார்க்கும் நடுவணரசு

இங்கே
ஏழைகள் பயணம் செய்யும் பேருந்திலும் ரயிலிலும் கட்டண உயர்வு
பணக்கார பாக்கியவான்கள் பயணம் செய்யும் விமான கட்டணத்தை குறைக்க பன்னாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அழைக்கும் அரசாங்கம்


இங்கே
அத்தியாவசிய பொருட்களை விலை உயர்த்தும்
அதிகாரத்தை கூட அம்பானிகளுக்கு கொடுத்த
அருமையான அரசு


இதெல்லாம் எங்கே????
என்று கேட்டால்
சந்தேகமில்லாமல் நீங்கள்
அக்மார்க் இந்தியர்!!!!

எழுதியவர் : துரைவாணன் (6-Jan-14, 11:10 pm)
பார்வை : 65

மேலே