உயிருள்ள காதல் வலி 555
பெண்ணே...
உன்னிடத்தில் வார்த்தை
ஒன்று கொடுத்தேன்...
நீயோ முட்களை
கொடுத்தாய்...
விலகி நின்றேன்...
மலர் கொடுத்தாய்
என்னிடத்தில்...
என் மனதையும்
பறித்தாய்...
மலர் சூட
நினைத்த போது...
என் மலர் பிடிக்கவில்லை
என்கிறாயடி...
முட்கள் தொடுத்த போதே
விலகி நின்றேனடி...
எதற்காக மலர் கொடுத்து
என் மனதை பறித்தாய்...
மனமின்றி...
நினைவின்றி நான்
ஜித்தனாக செல்லவா...
இல்லை மயானத்தை
நான் சொந்தமாக்கி கொள்ளவா...
பெண்ணே சொல்லி
விட்டு செல்லடி...
இப்போது.....