காட்சி
இமை மூட
இமை தெரியும்
விழி மூட
விழி தெரியும்
விழி தேட
இருள் தெரியும்
இருளில் இருள் தெரியும்
தெரியும் இருளில்
ஒளி புரியும்
ஒளியில் விழி தெரியும்
விழியாய் உளி கரையும்
உளி செதுக்கும்
ஒளியில்
இமை புரியும்
இமை புரிந்த சுமையில்
விழி அறியும்
விழி அறிந்த கதையில்
எமை மூடும், திரை விரியும்
திரை காக்கும்
சிறை- இமை
இருக்கும் வரை......