தன்னம்பிக்கை
ஜப்பானின் ஜாதகத்தை நாம் அறிவோம்
நாசத்தின் விளைவை நம்மைவிட
அதிகமாகவே பெற்றவர்கள் -இன்னும்
நாளுக்கு நாள் சுவாசிக்கிறார்கள்
நாசியை நசித்து உடலை எரித்த நச்சு குண்டும்
நினைத்த போதெல்லாம் சுழன்று வந்த சுனாமியும்
நிலத்தை பிளக்கும் பூகம்பமும்
அவர்களை இன்னும் வென்றுவிடவில்லை
அவர்களது வெற்றியை நாம் அளவிட முடியாது ஏன் நினைத்துகூட பார்க்க முடியாதது
ஏற்றத்தை கொண்ட ஏனியாகிவிட்டர்கள்
உலகிலே அவர்கள் படைப்பு முதல் தரம்
ஆடம்பர ஆலயம் இல்லை -அங்கே
கேளிக்கையும் கூத்துக்களும் இல்லை
கடவுளுக்காக என கூறி காலத்தை கரைப்பதும் இல்லை
அதனால் அவனிடம் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இல்லை
அன்று நாசபடுத்தியவன் -இன்று
காசுவாங்கி காவல் செய்கிறான்
பாசமானால் என்ன வேசமானால் என்ன
பகைவன் நண்பனும் பதுகாவலனும்மானான்
நரகம் எது சுவர்க்கம் எது என -பலர்
பலவழிகளில் தேடும்போது -இவர்களோ
அது பூமிதனில் உள்ளது -அதை
தன்னம்பிக்கை வென்றுதரும் என காட்டினார்கள்
தொழிலை தெய்வம்மாக்க்கினான்
உலகில் தன்மொழியால் தன்னை உயர்த்தினான்
தன்னம்பிக்கையை இறைவனின் வேதமாக்கினான்
இறைவன் அவர்களை மகிமைபடுத்தினான்