சுக பிரசவம்
இறைவனுக்கு தெரியும் ஆனால் கௌரிக்கு தெரியாது .தன் வாழ்வின் கருப்பு தினம் எது என்பது.
கௌரி என்று சொன்னால் தெரிவதை விட டாக்டர் கௌரி என்றால் எலோருக்கும் தெரியும்.ஏன்
என்றால் பிரசவம் பார்ப்பதில் கைராசி டாக்டர் என்ற பெயர் எடுத்தவர்.அவள் கணவரும் டாக்டர் தான்.அவர்களுக்கு சுஜி என்ற பெண் குழந்தை மட்டும் தான்.
உலக வழக்கம் இது தான் என்பது போல,
அரசியல்வாதிக்கும் டாக்டருக்கும் ஒரு பொருத்தம்.இருவருமே பெயர் எடுக்கும் வரை நல்லவர்கள் தான்.பெயர் எடுத்த பின் வசூல் ராஜாவாக மாறி விடுவர்.எல்லா டாக்டரையும் அப்படி சொல்ல முடியாது என்றாலும்.நம் கௌரி டாக்டர் அப்படி தான்.அவள் பிரசவம் பார்ப்பது எல்லாமே அறுவை சிகிச்சை முறை தான்.ஏன் என்றால் வருமானம் அதில் தான் அதிகம்.இவள் பணம் குறைவாக உள்ளவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதே இல்லை.பணம் இல்லை என்று இவள் நிராகரித்த பல பெண்கள் சரியான மருத்துவம் இல்லாமல் இறந்ததும் உண்டு.
இப்போது புரிந்து இருக்கும் இவள் பணம் உள்ளவர்களுக்கு மட்டும் கைராசி டாக்டர் என்று.
காலம் வெகுவாக தான் சுற்றுகிறது.அவள் பெண்ணுக்கு நல்ல வரன் பார்த்து, இவள் பலரின் வேதனையில் சேர்த்த பணத்தை கொண்டு பெரிதாக
திருமணம் நடத்தினாள்.அவள் மகள் கர்ப்பம் தரித்த பின்,இவள் தான் மருத்துவம் பார்த்து வந்தாள்.
பிரசவத்திற்கு ஒரு மாதம் உள்ள சமயத்தில் கௌரி ஒரு மருத்துவ சிகிச்சைக்காய் வெளியூர் பயணம் மேற்கொண்டாள்.அந்த சமயம் பார்த்து,
அவள் மகள் படியில் இருந்து தவறி விழுந்து வயிற்றில் அடி பட்டு மருதுவமனையில் அனுமதிக்க பட்டாள்.இந்த செய்தி அறிந்த உடன் கௌரி மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தாள்.ஆனால் அவள் வரும் முன்னே அவள் மகள் இறந்து விட்டாள்.அவள் வேதனை அழுகையாய் மாறி மருத்துவ மனை முழுதும் பரவியது.
அவள் மகளின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பலரும் பேசி கொண்டது, அவள் பணத்தை மட்டும் சேர்க்க வில்லை நிறைய பாவத்தையும் சேர்த்து இருக்கிறாள் என்று.அவர்கள் பேசியது அவள் காதிற்கு எட்ட வில்லை என்றாலும் அவள் மனதிற்கு எட்டியது அவள் மனசாட்சியின் மூலம்.
குறிப்பு : சுக பிரசவம் தான் வலி அதிகம் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு தாய்மை உணர்வை முழுதும் வழங்க கூடியது.தவிர்க்க முடியாத சந்தர்பத்தில் அறுவை சிகிச்சை செய்வது சரி.ஆனால் இன்று சுக பிரசவம் என்ற ஒன்று இல்லை என்பது போல மருத்துவர்கள் செய்யும் காரியத்தின் வெளிபாடே இந்த கதை.