நான்
நான் இருக்கிறேன் என்று வழிகாட்டியது
நான் இருக்கிறேன் என்றே தொடர்ந்தேன்
நான் மறைந்தது ஒரு கால கட்டத்தில்
நான் அப்போது தனிமையாக உணர்ந்தேன்.....
நான் அப்போது உணர்ந்தேன் அன்று
நான் என்ற அகந்தை எனக்கு வழிகாட்டவில்லை
நான் என்றபடி இறைவனே வழிகாட்டியதாய்...
நான் இல்லை இதை உணர்ந்தபோது....
நான் அவனது திருப் பதத்தில் சங்கமித்து இருந்தேன்
அது சரி....
நான் என்றே இறைவன் ஏன் சொன்னான்
நான் என்றே நினைத்திருந்த எனக்குப் புரியவேண்டும் என்பதால்....
நான் என்றே அவனும் சொன் - நான்...!!