அன்புக்கு வரையறை இல்லை
எனைப் பார்த்ததும்
ஒன்றுபோலவே ஓடிவந்தனர்
என் செல்ல மகளும் நாய்க்குட்டியும்
பைவ் ஸ்டாரை கொடுத்ததும்
தேங்க்யூ டாட் என்று சொல்லி விட்டு
விலகிச் சென்று சோபாவில் அமர்ந்து
விரும்பி திங்க ஆரம்பித்தாள் மகள்....
பிஸ்கட்டை கொடுத்தும் எனைப்
பிரியாமல் தொத்திக் கொண்டிருந்தது
பிரியமுடன் நாய்க்குட்டி....
நான்தான் ஊட்ட வேண்டுமாம்.....