மரணத்தின் காத்திருப்பு 1

...... மரணத்தின் காத்திருப்பு.......

ஆதவனின் ஆதிக்கம் ஆழ்கடலினுள் அடங்கியது...
இலைமறை காய் போல் மறைந்திருந்த பால்நிலா,
அதீத பிரேமையுடன் பூமியைக் குழந்தையைப் போல்,
குளிரத் தழுவி அணைத்துக் கொண்டிருந்தது.......

இயற்கையின் பரிணாம மாற்றங்கள் எதுவும்
அவளை வசப்படுத்தவில்லை....
செதுக்கிய சிலை போல் உட்கார்ந்திருந்தாள்....
மனதில் சொல்லொணா வலி.. வேதனையில்
உயிரும் உள்ளமும் துடிதுடித்துக் கொண்டிருந்தன...

'சொல்லணும்.. சொல்லலாம் என்ற தயக்கத்திலேயே
சொல்லாமல் கைநழுவ விட்ட அவள் காதல், இன்று அவன்
இல்லாமல் போய்விட்ட பின் பீரங்கியாய் அவள்
இதயத்தை தாக்கி சிதறவிட்டது தூள்தூளாய்....

'காதல் வந்தால் சொல்லிவிடு, உயிரோடிருந்தால் வருகின்றேன்'
என்று பாடியவன், சொல்லிட துடிக்கும் தருணத்தில்,
திரும்பி வர இயலாத தூரத்திற்கு சென்று விட்டதால்,
நெருப்பிலிட்ட பூவாய் கருகித் தான் போனாள்....

வாழ்வின் எல்லையில் நின்று, விதியின் கோர விளையாட்டில்,
தொலைந்து போன அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தபடி,
துளிதுளியாய் நழுவவிடுகின்றாள் அவள் உயிர் மூச்சை....
"என்னவனின் உயிரைக் கவர்ந்த கள்வனே/காலனே,,,,
விரைவில் வந்துவிடு, உன் தீராப்பசிக்கு இன்னுமொரு உயிர்
தயாராகக் காத்திருக்கின்றது விருந்தாகிட... விரைந்திடு..."
அவள் ஆயத்தமாகிவிட்டாள் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு.....

........*******........*******.......*****......******

தொடரும் பாகம் 2ல்

எழுதியவர் : .மகேஸ்வரி பெரியசாமி (9-Jan-14, 7:50 am)
பார்வை : 124

மேலே