தமிழின் தாயுணர்வு
நேர் வகிடு வைத்த அம்மாவுக்கு
கோண வகிடு வைத்துப் பார்த்து
குதூகலித்தது குழந்தை....! - எனவே
பழைய தமிழ் எழுத்துக்களை மாற்றி
பார்த்து ரசித்தான் பச்சைத் தமிழன்.....!
உருவ அமைப்பு மாறலாம் - ஆனால்
உள்ளத்தில் தாய்மையுணர்வு மாறவில்லை
தமிழ் எப்போதும்போல் இனிமை