பலே பட்டினத்தார்

பட்டினத்தார் துறவியாவதற்கு முன்
பெரிய வணிகர்.

கப்பலில் பயணம் மேற்கொண்டு,
பெரும் பொருள் ஈட்டி வந்தார்.

திடீரென இல்லறத்தைத் துறந்து துறவியானார்.
இந்த செய்தி கேட்ட அந்நாட்டு மன்னன்
மிகவும் வருந்தினான்.

ஒரு சேவகனை அனுப்பி
பட்டனத்தாரை அழைத்து வரச்சொன்னான்.

அவர் எங்கோ ஒருமரத்தடியில்
திறந்த‌ வெளியில் அமர்ந்திருந்தார்.

பட்டினத்தாரை நெருங்க அஞ்சி
சேவகன் திரும்பிவிட,

அரசன் வேறு ஒரு அதிகாரியை அனுப்ப..
அவரும் திரும்பினார்.

மந்திரி போனார் அவரும் திரும்பினார்.

கடைசியில் மன்னனே கிளம்பிச்சென்றான்.

முன்பெல்லாம் மன்னனை கண்டால் பணிவாகநின்று
மரியாதை செய்யும் பட்டினத்தார்,
கால்மேல் கால்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.

மன்னன் அவர் அருகே சென்று,
''இப்படி எல்லாவற்றையும் துறந்தீரே?
என்ன லாபத்தை கண்டீர்?'' என்று கேட்டான்
உடனே பட்டினத்தார்,
'' நீர் நிற்க, நாம் இருக்க என்றாராம்!

எழுதியவர் : படித்தது (10-Jan-14, 12:08 pm)
பார்வை : 110

மேலே