காதலென்னும் சோலையினில்37

ராஜசேகரனின் தோட்டத்தில் நடக்கும் அத்தனையும் வெளியில் ஒருவன் பார்த்து கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தான் அவன் கவனிப்பதை இவர்கள் யாரும் கவனிக்கவில்லை..........


கவிதா ராஜாவின் மார்பில் கண்ணீருடன் சாய்ந்து கொண்டாள், ராஜா அவளை தேற்றி விட்டு அன்று ஒருநாள் மட்டும் ஒருமுறை வலுக்கட்டாயமாக என்னை பார்த்திருந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வந்திருக்காது என்றான்.............


கவிதா அழுதுகொண்டே நீங்கள் தான் தாராவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டீர்கள் என்ற காரணத்தால் தான் மனதொடிந்து பார்க்க முயற்சித்து முடியாததால் கவலையில் சென்று விட்டேன் என்றாள்..........


குறுக்கே பேசிய ராஜா "என்னடி நீ லூசு மாதிரி பேசுறா", தாரா உன்னிடம் "நான் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறேன்" என்று சொல்லும் போது நீ என்ன சொல்லியிருக்கணும் " அவர் மேல் நம்பிக்கை உண்டு அவர் அப்படி எல்லாம் செய்திருக்கமாட்டார்" அவர் வாயால் என்னை வேண்டாம் என்று சொல்ல சொல்? என்று தாராவிடம் கூறியிருக்கவேண்டும்,

இல்லையென்றால் " ராஜசேகரன் மோசமானவன் என்று சொல்லி விட்டு நீ எதற்கு அவனை திருமணம் செய்து கொள்கிறாய் என்று கேட்டிருந்தால் அன்னிக்கே உனக்கு அர்த்தம் கிடைத்திருக்கும் என்றான்........



ஆமா! அண்ணி எந்த பொண்ணாவது ஒரு கெட்டவனை பலபெண்களை ஏமாற்றியவனை திருமணம் செய்ய சம்மதிப்பாளா? நீங்கள் கொஞ்சம் யோசித்திருக்கலாம்! என்று அவள் பங்குக்கு ராஜலெக்ஷ்மி பேசினாள்........


நான் இதைப்பற்றி யோசிக்கவே இல்லை என்று கவிதா சொல்ல "அதான் நீ நம்ம காதல் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை" என்று அவன் சொல்லி தலையில் செல்லமாக குட்டினான்..........


சரி பழையதெல்லாம் விடு இப்போது என்னை முழுசா நம்புறியா என்று ராஜா கேட்க?

ம்... நம்பாமலா! என்று அவன் மேல் தலை சாய்த்தாள்.......


ராஜாவின் அம்மா "சரி விதி என்னவெல்லாமோ பண்ணிவிட்டது' இனி நடக்கவேண்டியதை பார்ப்போம் உடனே ஒரு நல்ல நாளில் கோவிலில் திருமணத்தை வைத்துவிடுவோம் முறைப்படி திருமணம் செய்யாததுதுதான் எல்லாரையும் இப்படி போட்டு வதைக்குது என்று சொல்லி கவிதாவிடம் வந்து உன் அப்பா அம்மாவையும் அழைக்கவேண்டு ஒரு முறை உன் ஊருக்கு சென்று கையோடு அவர்களையம் அழைத்து வரலாம் என்று சொல்ல மகிழ்ச்சி பரவசத்தால் அத்தையை கட்டியணைத்து முத்தமிட்டாள்...........


பதிலுக்கு அவளும் உச்சி முகர்ந்தாள்.........

ராஜலெக்ஷ்மி முதல் குட்டி ராஜாவரை அனைவரும் கவிதாவின் ஊருக்கு செல்ல தயாரானார்கள்.................


வெளியில் நின்ற அந்த மர்பநபர் பூத் பக்கம் சென்று யாருக்கோ அழைப்பு
விடுத்தது அனைத்தையும் கண்காணித்தேன் அனைவரும் சேர்ந்துதான் இருக்கிறார்காள் கஷ்டம்தான் இருந்தாலும் உனக்காக முயற்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை துண்டித்தான்...................




தொடரும்.................

எழுதியவர் : (10-Jan-14, 12:55 pm)
பார்வை : 230

மேலே