குருவிகளின் கேள்வி

( ஒரு புத்தகம் வாங்கிய காகிதப் பையில் அச்சாகியிருந்த அருமையான கவிதைகள் இரண்டு.
எழுதியவர் தூரிகை சின்னராசு . அவருக்கு நன்றியுடன் அனைவரின் பார்வைக்கும் )

குருவியின் கேள்வி :
------------------------------
வீடு கட்டுவதற்காக
வெட்டப்படுகின்ற
மரத்தில் நாம்
கூடு கட்டி
வாழ்கின்ற விபரம்
கோடரிக்குத் தெரியமா ?

மரம் பேசுகிறது
------------------------

கட்டில் ,தொட்டில் ,
கதவு,ஜன்னல்
சட்டம் ,விட்டம்
எதுவாக இல்லை நான்,
உன் வீட்டில்,
கொல்லையில் மரமாகத் தவிர

எழுதியவர் : தூரிகை சின்னராசு (11-Jan-14, 12:02 pm)
பார்வை : 96

மேலே