உறவும்உணர்வும்பொங்கட்டும் - குமரிபையன்
உழவர் உழைப்பால் மணி கதிர்கள்
உதித்து வயல்கள் பொங்கட்டும்..!
பார்க்கும் வறுமை பிணிகள் தோற்று
பாடும் செழுமை பொங்கட்டும்..!
வள்ளல் நிறைந்து கொல்லல் குறைந்து
வசந்தம் நாட்டில் பொங்கட்டும்..!
அன்னை தந்தையை அன்புடன் காக்க
அணைக்கும் கைகள் பொங்கட்டும்..!
அரக்கர் இல்லா அன்பு உலகாய்
அமைதி தினமும் பொங்கட்டும்..!
மதத்தால் மனதை மாசுபடாமல்
மனதில் மனிதம் பொங்கட்டும்..!
பகைவர் பழமை பழிகள் மறந்து
பணிவாய் பொறுத்தல் பொங்கட்டும்..!
தமிழன் வாழ புவியில் எங்கும்
தமிழர் திருநாள் பொங்கட்டும்..!
தளத்தின் தமிழ் உறவுகளுக்கு
பொங்கும் வாழ்த்துக்களுடன்..!